கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல்
கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல்
வேலூர்
வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயிலில் செல்போன், சிகரெட், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக ஜெயில் காவலர்கள் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி ஜெயில் அலுவலர் அருள்குமார் தலைமையிலான காவலர்கள் ஜெயில் வளாகம் மற்றும் கழிவறை பகுதிகளில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள 7-வது பகுதி முதல் அடைப்பு அருகே உள்ள கழிவறையில் செல்போன், பேட்டரி, சிம்கார்டு ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஜெயில் உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டு கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இதுகுறித்து ஜெயிலர் மோகன்குமார் பாகாயம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சொக்கலிங்கம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.