கன்டெய்னர் லாரி பறிமுதல்


கன்டெய்னர் லாரி பறிமுதல்
x

கன்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியம் இ.எல்.ரெட்டியபட்டியை சேர்ந்தவர் பூமாரி (வயது 60). இவர் வீட்டில் நேற்று திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வெளியில் சென்று பார்த்த போது அந்த வழியாக சென்ற கன்டெய்னர் லாரி பூமாரி வீட்டில் சர்வீஸ் வயர்களை அறுத்துக் கொண்டு செல்வது தெரிந்தது.

மேலும் அருகில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் மின் இணைப்பு வயர்களையும் அறுத்துச் சென்று லாரி நிற்காமல் சென்றது. உடனே அப்பகுதி மக்கள் விரைந்து சென்று லாரியை பின்தொடர்ந்து விரட்டி பிடித்தனர். பின்னர் லாரியை ஏழாயிரம் பண்ணை போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் வீட்டின் மின் வயர்களை அறுத்து சென்ற கன்டெய்னர் லாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பூமாரி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இர்பான் (வயது 40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story