சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சிய மின்மோட்டார்கள் பறிமுதல்
தலைஞாயிறு பகுதியில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சிய மின்மோட்டார்கள் பறிமுதல்
வாய்மேடு:
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக தண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதையடுத்து தலைஞாயிறு பகுதியில் சட்டவிரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர் பைப்புகளில் தண்ணீர் உறிஞ்சுபவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்களது மோட்டாரும் பறிமுதல் செய்யப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று தலைஞாயிறு 5-வது வார்டு சிந்தாமணிதெரு பகுதியில் சட்டவிரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சிய 3 பேரின் வீட்டில் உள்ள மின்மோட்டார்களை தலைஞாயிறு பேரூராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் கூறியதாவது, தலைஞாயிறு பகுதி முழுவதும் யாரேனும் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால், அவர்களது மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு மட்டும் இல்லாமல் அவர்களது குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்றார்.