கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சிலால் நால்ரோடு பகுதியில் அரியலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் ராமஜெயம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்தபோது, அரசு அனுமதி இல்லாமல் 2 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தா.பழூர் போலீசாருக்கு சுரங்கத்துறை அதிகாரி ராமஜெயம் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திலிருந்து கூழாங்கற்கள் கடத்திவரப்பட்ட டிப்பர் லாரியை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
Related Tags :
Next Story