கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்


கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல் டிரைவருக்கு வலைவீச்சு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் புறவழிச்சாலை அருகில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரியை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் லாரியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். பின்னர் அந்த லாரியை போலீசார், சோதனை செய்ததில் அந்த லாரியினுள் 3 யூனிட் கூழாங்கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், இதை கடத்திக்கொண்டு வந்ததும், தப்பி ஓடிய டிரைவர் உளுந்தூர்பேட்டை நகர் கிராமத்தை சேர்ந்த பாண்டித்துரை(வயது 29) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடிய பாண்டித்துரையை தேடி வருகின்றனர்.


Next Story