அனுமதியின்றி பாறைகளை உடைக்க பயன்படுத்திய எந்திரங்கள் பறிமுதல்
அனுமதியின்றி பாறைகளை உடைக்க பயன்படுத்திய எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை
கீரனூர்:
கீரனூர் அருகே அம்மா சத்திரம் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்களில் உள்ள பாறைகளை அனுமதியின்றி உடைத்து எடுப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் குளத்தூர் வட்ட தாசில்தார் சக்திவேல் மற்றும் வருவாய் அலுவலர்கள் சென்று பார்த்தபோது பாறைகளை உடைத்துக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் தப்பி ஓடி விட்டனர். பின்னர் பாறைகளை உடைக்க பயன்படுத்திய பதிவு எண் இல்லாத ஹிட்டாச்சி எந்திரம் 2 மற்றும் டோசர் எந்திரம் ஒன்று ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாசில்தார் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story