ஆம்னி பஸ் பறிமுதல்
தகுதிச்சான்று பெறாமல் பயணிகளை ஏற்றிச்சென்ற ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி நான்கு வழிச்சாலை பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த பஸ்சில் தகுதிச்சான்று இல்லாமல் பயணிகளை ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ஆம்னி பஸ்சை பறிமுதல் செய்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கண்ணன், பயணிகளை மாற்று பஸ்சில் தூத்துக்குடிக்கு அனுப்பிவைத்தார். மேலும் முறையான தகுதிச்சான்று பெற்று பஸ்சை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story