வேனுடன் ரேஷன் அரிசி பறிமுதல்
வேனுடன் ரேஷன் அரிசி பறிமுதல்
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் போலீசார் ராஜபாளையம் அருகே இனாம் செட்டிகுளம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டபோது அந்த வேனில் தலா 50 கிலோ கொண்ட 50 மூடை ரேஷன்அரிசி இருந்தது. வேனுடன், 2½ டன் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் வேனை ஓட்டி வந்த ராஜபாளையம் எஸ். ராமலிங்காபுரத்தைச் சேர்ந்த அருண்குமார்(வயது 26) என்பவரைக் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மூடைகள் யாருடையது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story