மணல் கடத்தல் டிராக்டர்கள் பறிமுதல்


மணல் கடத்தல்  டிராக்டர்கள் பறிமுதல்
x

திருக்கோவிலூர் அருகே மணல் கடத்தல் டிராக்டர்கள் பறிமுதல்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் காடகனூர் கிராமத்தில் உள்ள ஓடையில் மணல் திருட்டு நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் காடகனூர் கிராமத்துக்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த டிரைவர்கள் 2 டிராக்டர்களை நடுவழியில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி(வயது 47), ஏழுமலை மகன் செல்வகுமார்(32) ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story