அந்தியூர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது


அந்தியூர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது
x

மணல் கடத்திய லாரி பறிமுதல்

ஈரோடு

அந்தியூர் எண்ணமங்கலம் அருகே உள்ள கோவிலூர் நீரோடையில் இருந்து லாரியில் மணல் கடத்துவதாக எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நீரோடை பகுதிக்கு சென்றனர்

அப்போது டிப்பர் லாரியில் ஒருவர் மணல் ஏற்றி கொண்டிருந்ததை பார்த்தனர். இதைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது அவர் ஆப்பக்கூடல் அருகே உள்ள மல்லியூர் பகுதியை சேர்ந்த சின்னுசாமி (வயது 37) என்பதும், நீரோடையில் இருந்து மணல் கடத்தி செல்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து 2 யூனிட் மணலுடன் இருந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டு வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சின்னுசாமியை கைது செய்தனர்.


Next Story