மண் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்


மண் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Jun 2023 1:00 AM IST (Updated: 17 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்;-

காவேரிப்பட்டணம் மண்டல துணை தாசில்தார் ஜெயபால் மற்றும் அதிகாரிகள் கே.ஆர்.பி. அணை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் நின்ற 2 டிராக்டர்களை சோதனை செய்த போது அதில் 2 யூனிட் மண் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் நாட்டாண்கொட்டாயில் இருந்து மணி நகருக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story