ஓட்டல்களில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்


ஓட்டல்களில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்
x

விக்கிரமசிங்கபுரத்தில் ஓட்டல்களில் கெட்டுப்போன சிக்கனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள 7 அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி செல்லபாண்டியன் தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ் மற்றும் பணியாளர்கள் சோதனை நடத்தினர். அப்போது கெட்டுப்போன 12 கிலோ சிக்கன் மற்றும் 2 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதுபோன்று கெட்டுப்போன உணவுப்பொருட்களை ஓட்டலில் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அபராதம் விதிப்பதுடன் ஓட்டலை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story