புகையிலை பாக்கெட் பறிமுதல்


புகையிலை பாக்கெட் பறிமுதல்
x

தாயில்பட்டியில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

ஏழாயிரம்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக ஏழாயிரம்பண்ணை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் ஊத்துப்பட்டி, பாண்டியாபுரம், ஆர். மடத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள பெட்டி கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது ஊத்துப்பட்டி மேலத் தெருவை சேர்ந்த திருப்பதி (வயது60) என்பவர் பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 50 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததுடன், திருப்பதியை போலீசார் கைது செய்தனர்.


Next Story