புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்


புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
x

புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் சின்னையா பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி என்ற ராஜேஷ் (வயது 33). இந்நகர் பி.பி நந்தவனத்தெருவில் உள்ள இவரது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட 167 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளார். அதேபோல விருதுநகர் அருகே கீழவலையபட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (70). இவரது கடையில் இவரும், சத்திய நாராயணன் (33) என்பவரும் ஒரு பையோடு நின்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து சென்ற வச்சக்காரப்பட்டி போலீசார் அந்த பையை சோதனையிட்டபோது அதில் 701 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story