புகையிலை பொருட்கள் பறிமுதல்- 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் பறிமுதல்- 3 பேர் கைது
x

முத்தையாபுரத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல்- 3 பேர் கைது

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் தலைமையிலான போலீசார் நேற்று முத்தையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அதில் இருந்தவர்கள் போலீசாரை சோதனை செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த லோடு ஆட்டோவை போலீசார் சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 517 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதனை பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்த பண்டாரவிளை ஜெயராஜ் மகன் ஏசுராஜா (வயது 29), ஆறுமுகநேரி சுடலைமுத்து மகன் இசக்கிராஜா (32), அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டியன் மகன் சாந்தகுமார் (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


Next Story