ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Sept 2022 12:15 AM IST (Updated: 16 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை

தேவகோட்டை,

பெங்களூருவில் இருந்து ராமநாதபுரத்திற்கு சென்ற ஒரு தனியார் பஸ்சில் போதை பொருட்கள் கடத்தி வருவதாக தேவகோட்டை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த பஸ்சை தேவகோட்டை பஸ் நிலையத்தில் மறித்து சோதனையிட்டனர்.

அப்போது பஸ்சில் 4 மூடைகளில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் புதுமடம் அருகே உள்ள வெள்ளரி ஓடையை சேர்ந்த சுதாகர் (வயது 42), பஸ் டிரைவர் கர்நாடக மாநிலம் குட்டாடஹள்ளி சதீஷ்குமார் (35), பரமக்குடி முதலூர் ராஜீவ் காந்தி (37) ஆகியோரை கைது செய்தனர். பஸ் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



Next Story