புகையிலை பொருட்கள் பறிமுதல்


புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

ராஜபாளையம் பகுதியில் புகையிைல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் காரில் கடத்தி கொண்டு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் மற்றும் போலீசார் ராஜபாளையம்-மதுரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 19 கிலோ இருந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் முத்துலிங்கபுரம் அரசியார்பட்டி பகுதியை சேர்ந்த கெங்கையா (வயது 37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story