அனுமதியின்றி மண் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது


அனுமதியின்றி மண் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது
x

அனுமதியின்றி மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்ததுடன் டிரைவரை போலீசார் ைகது செய்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

அனுமதியின்றி மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்ததுடன் டிரைவரை போலீசார் ைகது செய்தனர்.

மண் கடத்தல்

தாயில்பட்டி அருகே கிராவல் மண் அனுமதியின்றி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் விருதுநகர் கனிமம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனித்துணை வட்டாட்சியர் சிவபெருமாள் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

அப்போது அந்த வழியாக மண்ணுடன் வந்த டிப்பர் லாரி அதிகாரிகள் வாகன சோதனை செய்வதை பார்த்து லாரியை நிறுத்திவிட்டு 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் லாரியை சோதனை செய்து பார்த்த போது அதில் 2 யூனிட் மண் அனுமதியின்றி ஏற்றி வரப்பட்டது தெரியவந்தது.

டிரைவர் கைது

இதையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் சாத்தூர் அருகே உள்ள சூரங்குடியை சேர்ந்த வெங்கடேசனை (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story