லாரிகள், பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல்


லாரிகள், பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல்
x

குஜிலியம்பாறை அருகே குளத்தில் அனுமதியின்றி களிமண் அள்ளிய லாரிகள், பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

குஜிலியம்பாறை அருகே முத்தம்பட்டியில் உள்ள பெரியகுளத்தில் இருந்து அரசு அனுமதியின்றி களிமண் அள்ளப்படுவதாக குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அரசு அனுமதியின்றி பொக்லைன் எந்திரங்களை கொண்டு டிப்பர் லாரிகளில் களிமண் அள்ளுவது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் டிரைவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் 4 டிப்பர் லாரிகள் மற்றும் 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து. குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story