பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற 5 வாகனங்கள் பறிமுதல்


பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற 5 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் உரிய அனுமதி பெறாமல் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற 5 வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன பறிமுதல் செய்துள்ளார்.

தர்மபுரி

தர்மபுரியில் உரிய அனுமதி பெறாமல் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற 5 வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன பறிமுதல் செய்துள்ளார்.

கலெக்டர் உத்தரவு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு உரிய அனுமதி பெறாமல் வாகனங்கள் இயக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதுகுறித்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.

அதன்பேரில் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர் மற்றும் அலுவலர்கள் தர்மபுரி நகரில் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை உரிய அனுமதி பெறாமல் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்றது தெரிய வந்தது.

5 வாகனங்கள் பறிமுதல்

இதுதொடர்பாக 5 வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்கள் அனைத்தும் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இனிவரும் காலங்களில் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் உரிய அனுமதி பெறாமல் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்படும். இது போன்ற தணிக்கைகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.


Next Story