பூங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்வு
குஜராத்தில் நடைபெறும் பயிற்சிக்கு பூங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர்
வாணியம்பாடி
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பாக ஒரு பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுத்து, அவரை குஜராத் மாநிலத்தில் வருகிற 17-ந்் தேதி வரை நடைபெறும் தலைமை மேலாண்மை பயிற்சி முகாமுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம், பூங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலி தினகரன் இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அஞ்சலி தினகரன் பட்டதாரி ஆவார்.
Related Tags :
Next Story