9 ஆசிரியர்கள் மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு


9 ஆசிரியர்கள் மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
x

சிவகங்கை மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

நல்லாசிரியர் விருது

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு மாநில அரசின் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:- செம்பனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மங்கையர்கரசி, மல்லல் அரசு ஆதி திராவிட நல மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சோவி, தேவகோட்டை தே.பிரித்தோ மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் அந்தோணிசாமி, இலுப்பைக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முனீஸ்வரன்.

9 ஆசிரியர்கள்

திருப்பத்தூர் ஒன்றியம் சாமந்தன் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, காளையார் கோவில் ஒன்றியம் ஒய்ய வந்தான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பால் ஜோசப், சிவகங்கை ஒன்றியம் நாலுகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ் செல்வி, இளையான்குடி ஒன்றியம் தெற்கு கோட்டையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வேதம்மாள், புதுவயல் வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சுதாகர் ஆகிய 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகவலை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.



Next Story