தேசிய வருவாய் வழி தேர்வு: தற்காலிக விடைக்குறியீடு இணையதளத்தில் வெளியீடு
தேசிய வருவாய் வழி தேர்விற்கான தற்காலிக விடைக்குறியீடு இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் சுவாமிநாதன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது.:-
கடந்த மாதம் 25-ந் தேதி நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத் தேர்வு சம்பந்தமான தற்காலிக விடைக்குறியீடு www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வுகள் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைக்குறியீட்டில் மாற்றங்கள் தெரிவிக்க விரும்பினால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அவற்றை உரிய ஆதாரத்துடன் வருகிற 14-ந் தேதிக்குள் dgenmms@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story