சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு; 1,770 பேர் எழுதினர்
நெல்லை மாவட்டத்தில் நடந்த சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வை 1,770 பேர் எழுத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் நடந்த சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வை 1,770 பேர் எழுத்தினர்.
சாலை ஆய்வாளர் தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை தாலுகா பகுதிகளில் உள்ள 9 பள்ளி, கல்லூரிகளில் 11 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்விற்கு 3,080 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
1,770 போ் எழுதினர்
ஆனால் 1,770 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1,310 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வுகளை கண்காணிக்க துணை தாசில்தார் நிலையில் 5 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய 12 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். தேர்வர்கள் சரியான நேரத்தில் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்பதற்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரையும் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கவில்லை.