கிரிக்கெட் வீரர்கள் தேர்வு
கிரிக்கெட் போட்டிக்கான சிவகங்கை மாவட்ட அணி வீரர்கள் தேர்வு வருகின்ற 13-ந் தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கை
காரைக்குடி,
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையேயான 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கான சிவகங்கை மாவட்ட அணி வீரர்கள் தேர்வு வருகின்ற 13-ந் தேதி நடைபெற உள்ளது. அதன்படி காலை 9 மணி அளவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி மைதானத்தில் தேர்வு நடக்கிறது. இந்த அணித்தேர்வில் கலந்து கொள்ள வயதுவரம்பு 1.9.2008 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். வீரர்கள் தங்களது வயது சான்றிதழ் நகல், வெள்ளை சீருடை, மற்றும் தாங்களே கிரிக்கெட் உபகரணங்கள் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை செயலாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story