கோவில்பட்டி அரசு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு


கோவில்பட்டி அரசு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு
x

கோவில்பட்டி அரசு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு தேர்வு, தலைமை ஆசிரியர் ஜெயலதா தலைமையில் நடந்தது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜலட்சுமி, நகரசபை கவுன்சிலர்கள் உலகராணி, சித்ராதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை அமல்புஷ்பம் வரவேற்று பேசினார். பள்ளி மேலாண்மை குழு தலைவராக ரெங்கம்மாள், துணை தலைவராக கவுரி உள்பட 20 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் பள்ளி மேம்பாடு மற்றும் மாணவிகளின் வளர்ச்சிக்கும், பெற்றோர், ஆசிரியர், மாணவர் உறவு மேம்படவும் பாடுபட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், ஆசிரியர்கள் கண்ணன், சுப்பிரமணியன், ராஜேஸ்வரி, கோகிலா, சரவணசெல்வி, ஷகிலா, செல்டன், சென்னப்பன், ஓவிய ஆசிரியர் வேல்முருகன் மற்றும் மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.


Next Story