திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு நிலம் தேர்வு
திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு நிலம் தேர்வு செய்யப்பட்டது.
பொன்னை ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு நாளும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அதனை பொன்னை ஆற்றங்கரையோரம் கொட்டி வந்தனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம் ஏற்பட்டது இந்தநிலையில் மாவட்ட நிர்வாகத்திற்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
அதன்பேரில் தமிழக அரசு பொன்னை ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த ஒப்புதல் வழங்கிய நிலையில் இடம் தேர்வு செய்யும்பணி நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமையில் பொன்னை அடுத்த முத்தியால்பள்ளி பகுதியில் இடம்தேர்வு செய்யப்பட்டு அளவிடும் பணிமேற்கொண்டனர். மேல்பாடி வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், பொன்னை ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் நதியா பவுல், கிராம நிரவாக அலுவலர் முனியப்பன், சர்வேயர் வடிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டது. இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை தேர்வு செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.