பல்நோக்கு விளையாட்டு மையம் கட்ட இடம் தேர்வு
பல்நோக்கு விளையாட்டு மையம் கட்ட இடம் தேர்வு
மணல்மேடு
தொகுதிக்கு ஒரு விளையாட்டு மையம் தொடங்கப்படும் என தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு மணல்மேடு அரசு ஆண்கள் மேநிலைப்பள்ளியில் பல்நோக்கு விளையாட்டு மையம் கட்டுவதற்கான இடம் தேர்வு நடைபெற்றது. இந்த இடத்தை ராஜகுமார் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், கோட்டாட்சியர் யுரேகா, மாவட்ட கவுன்சிலர் இளையபெருமாள், மணல்மேடு பேரூராட்சி மன்ற தலைவர் கண்மணி அறிவடிவழகன், பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இதுகுறித்து எம்.எல்.ஏ. கூறுகையில், தொகுதிக்கு ஒரு விளையாட்டு மையம் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி இந்த விளையாட்டு மையத்தில் முதன்முதலாக 400 மீட்டர் ஓட்டப்பந்தய டிராக் அமைக்கப்படும். மேலும் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட உள்ளது. எதிர்காலத்தில் பல்நோக்கு அரங்கமாக உருவாக்கப்படும் என்றார்