சந்தப்பேட்டையில் நகர்ப்புற சுகாதார மையம் அமைக்க இடம் தேர்வு
சந்தப்பேட்டையில் நகர்ப்புற சுகாதார மையம் அமைக்க இடம் தேர்வு திருக்கோவிலூர் தாசில்தார் தகவல்
திருக்கோவிலூர்
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடியின் பரிந்துரையின் பேரில், திருக்கோவிலூரில் நகர்ப்புற சுகாதார மையம் அமைக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
ஆனால், நகர்ப்புற சுகாதார மையம் அமைய இடம் கிடைக்காமல் இருந்து வந்தது. எனவே அதிகாரிகளும் அதற்கான இடத்தை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் மற்றும் நகராட்சி ஆணையாளர் கீதா, நகர மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரிகுணா ஆகியோரின் முயற்சியின் காரணமாக திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் உள்ள நகராட்சி பயணியர் விடுதியின் பின்புறம் நகர்ப்புற சுகாதார மையம் அமைக்க தேவையான இடத்தை தேர்வு செய்து வழங்கினர்.
இதற்கான ஆவணங்களை திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணன், மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதன் மூலம் திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் விரைவில் நகர்ப்புற சுகாதார மையம் அமைக்கப்பட உள்ளது என்று தாசில்தார் கண்ணன் தெரிவித்தார்.