தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு 800 டாக்டர்கள் மூலம் தன்னம்பிக்கை கவுன்சிலிங்
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு 800 டாக்டர்கள் மூலம் தன்னம்பிக்கை கவுன்சிலிங் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.
திருப்பூர்,
திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
கனியாமூர் பள்ளியில் நடக்ககூடாத சோக சம்பவம் நடந்துவிட்டது. இதுபோன்ற சம்பவங்களில் காரணகர்த்தாவாக இருக்ககூடிய நிறுவனத்தினர், தனிநபர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு கோர்ட்டில் உள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் தண்டனையில் இருந்து நழுவ முடியாது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நாளை (இன்று) தன்னம்பிக்கை கவுன்சிலிங் திட்டத்தை தொடங்க இருக்கிறார். 800 டாக்டர்களை கொண்டு இந்த திட்டம் செயல்பட இருக்கிறது. தமிழகத்தில் 413 கல்வி ஒன்றியங்கள் உள்ளன. ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 2 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு, அந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கவுன்சிலிங் வழங்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.