உளுந்தூர்பேட்டை அருகே அரசு பள்ளியில் போதை சாக்லெட் விற்பனை மாணவன் கைது


உளுந்தூர்பேட்டை அருகே  அரசு பள்ளியில் போதை சாக்லெட் விற்பனை  மாணவன் கைது
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே அரசு பள்ளியில் போதை சாக்லெட் விற்பனை செய்த மாணவன் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி


உளுந்தூர்பேட்டை அருகே திருநறுங்குன்றம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவன், போதை சாக்லெட்களை விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அதில், அந்த பள்ளியில் படித்து வரும் பிளஸ்-2 மாணவன் சக மாணவர்களுக்கு போதை சாக்லெட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் அந்த மாணவன் கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்து வந்துள்ளான். இதையடுத்து அந்த மாணவனை போலீசார் கைது செய்து, அவனிடம் இருந்த 7 பாக்கெட் போதை சாக்லெட்களை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த மாணவனிடம் போதை சாக்லெட்களை கொடுத்து விற்பனை செய்ய அறிவுறுத்தியது யார்? அவரை பின்னால் இருந்து இயக்குவது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story