போதை சாக்லெட்டுகள் விற்பனை?


போதை சாக்லெட்டுகள் விற்பனை?
x

ஊத்தங்கரையில் போதை சாக்லெட்டுகள் விற்பனையில் போதை சாக்லெட்டுகள் விற்பனை நடைபெறுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரி நேற்று திடீரென சோதனை நடத்தினார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரையில் போதை சாக்லெட்டுகள் விற்பனை நடைபெறுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரி நேற்று திடீரென சோதனை நடத்தினார். இதில் ஒரு கிலோ எடையுள்ள சாக்லெட்டுகள் கைப்பற்றப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

போதை சாக்லெட்டுகள்

ஊத்தங்கரையில் பள்ளிகள் அருகில் உள்ள கடைகளில் போதை சாக்லெட் விற்பதாக உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊத்தங்கரையில் உள்ள பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நாகேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார்.

பேரூராட்சி சாலையில் உள்ள வெளி மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் நிறுவனத்தில் சந்தேகத்திற்கு உரிய வகையில் ஒரு கிேலா எடையுள்ள சாக்லெட் கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல்

இதையடுத்து அந்த சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. இந்த சாக்லெட்டுகள் அனைத்தும் பள்ளி, கல்லூரிகள் அருகில் உள்ள சிறிய கடைகளில் விற்பனைக்காக வைத்து உள்ளது கண்டறியப்பட்டது. சோதனை முடிவில் சாக்லெட்டுகள் அனைத்தும் போதை சாக்லெட் என கண்டறியப்பட்டால் அந்த கடை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் கூறினார்.


Next Story