கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மதுரை கரிமேடு போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் பெத்தானியாபுரம், மேட்டு தெருவில் சென்ற போது அங்கு கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. உடனே அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் பெத்தானியாபுரம், என்.எஸ்.கே.வீதியை சேர்ந்த விஜய் (வயது 28), சின்னதம்பி தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (35) என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 1,200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story