ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை


ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை
x

பொய்கை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனையானது.

வேலூர்

அணைக்கட்டு தாலுகா பொய்கை வாரச்சந்தைக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் உயர்ரக கறவை மாடுகள் உள்ளிட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கறவை மற்றும் சினை மாடுகளை வாங்க திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி, சித்தூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து வியாபாரிகள் வருகின்றனர். இதனால் ஒரு கறவை மாட்டின் விலை ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை என்பதால் குர்பானிக்காக மாடுகள் விற்பனை அதிகமாக இருந்தது. இதனால் நேற்று நடந்த பொய்கை மாட்டுச்சந்தையில் சுமார் 1,200-க்கும் அதிகமான மாடுகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டன.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் பக்ரீத் பண்டிகை என்பதால் ஏராளமான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ரூ.2 கோடிக்கு மேல் வியாபாரம் நடந்திருக்கும் என தெரிவித்தனர்.


Next Story