இருசக்கர வாகனத்தில் வீடு வீடாக சென்று மதுபாட்டில் விற்பனை


இருசக்கர வாகனத்தில் வீடு வீடாக சென்று மதுபாட்டில் விற்பனை
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையின்போது இருசக்கர வாகனத்தில் வீடு வீடாக சென்று மதுபாட்டில் விற்பனை 2 வாலிபா்கள் கைது

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே மேமாலூர் கிராமத்தில் மா்ம நபர்கள் ஸ்கூட்டர் மூலம் வீடு வீடாக சென்று மது பாட்டில்கள் வினியோகம் செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், அந்தோணிகுருஸ் ஆகியோர் தலைமையிலான போலீசார் மேமாலூர் கிராமத்துக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 25 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து ஸ்கூட்டரில் வந்த 2 பேரையும் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் பழங்கூர் கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் ஏழுமலை(வயது 34), ஜெயராமன் மகன் பாஸ்கர்(36) என்பதும் பொங்கல் பண்டிகைக்காக பெங்களூருவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து வீடு வீடாக சென்று மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவா்களிடம் இருந்து 25 மது பாட்டில்களுடன்

இதேபோல் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் திருப்பாலபந்தல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வாசன் மற்றும் போலீசார் அருதங்குடி கிராமத்தில் சாராய வேட்டை நடத்தினர். அப்போது புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்த கண்ணன் மனைவி கமலா(65) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story