தக்காளி ரூ.80-க்கு விற்பனை


தக்காளி ரூ.80-க்கு விற்பனை
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தக்காளி ரூ.80-க்கு விற்க்கப்பட்டது.

ராமநாதபுரம்

தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்த நிலையிலேயே இருந்து வந்த நிலையில் கிலோ ரூ.180 வரை விற்பனையானது. இதன்காரணமாக பொதுமக்கள் தங்களின் உழைப்பிற்கான ஊதியத்தில் பாதி தொகையை தக்காளிக்கு செலவிடும் அவல நிலை ஏற்பட்டது.

இருப்பினும் தங்களின் தேவை கருதி 100 கிராம் 200 கிராம் என தக்காளியை வாங்கி சென்ற நிலை நீடித்தது. ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே தக்காளி விலை குறையும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தக்காளி விலை படிப்படியாக சரியத்தொடங்கியது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை ரூ.120 முதல் 110 வரை விற்பனையான தக்காளி நேற்று சந்தை பகுதியில் கிலோ ரூ.100 என்றும் ரூ.90 என்றும் விற்பனையானது. நேரம் செல்ல செல்ல ரூ.80 என விலை இறங்கி விற்பனையானது.

நகரில் பல பகுதிகளில் வண்டிகளில் வைத்து தக்காளி விற்பனை செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதாகவும், ஒட்டன்சத்திரம் பகுதிக்கு அதிகளவில் வந்துள்ளதால் தக்காளி விலை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து வாங்கி வந்த தக்காளியை வியாபாரிகள் கிலோ ரூ.80 என்றும் 1¼ கிலோ தக்காளி ரூ.100 என்றும் விற்பனை செய்தனர். தக்காளி விலை பாதியாக குறைந்ததை அறிந்த பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அதிகளவில் வாங்கி சென்றனர்.


Next Story