செல்வ கணபதி கோவில் கும்பாபிஷேகம்
திருப்பத்தூரில் செல்வ கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருப்பத்தூர்- சேலம் மெயின் ரோடு பொதிகை என்ஜினீயரிங் கல்லூரி, ஒய்.டி.கே. மஹால் அருகே புதிதாக கட்டப்பட்ட செல்வகணபதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கணபதி ஹோமம், முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, பூர்ணாஹூதி, சங்கல்பம் நடைபெற்றது. தொடர்ந்து கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பொதுமக்கள் ஓம் கணபதி, விநாயகா என்று கோஷமிட்டனர். தொடர்ந்து விநாயகர் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி.குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் லீலா சுப்ரமணியம், கூட்டுறவு சங்க தலைவர் கே..எம்.சுப்பிரமணியம், ஏலகிரி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒய்.டி.கிருபாகரன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.