செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
வாழப்பாடி:-
வாழப்பாடியில் போலீஸ் நிலையம் எதிரே உள்ள பிரசித்தி பெற்ற செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம், தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் வாழப்பாடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று மாலை அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் முளைப்பாரி, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மேலும் இரவு முழுவதும் யாகசாலை பூஜைகள் நடந்தன. இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி வரை மண்டலாபிஷேக பூஜையும், 8-ந் தேதி சங்காபிஷேகமும் நடக்கிறது. வருகிற 23-ந் தேதி தீ மிதி விழா நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.