சேமங்கி மாரியம்மன் கோவில் திருவிழா


சேமங்கி மாரியம்மன் கோவில் திருவிழா
x

சேமங்கி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

கரூர்

நொய்யல் அருகே சேமங்கியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா கடந்த 23-ந்தேதி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது. பின்னர் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகம் முன்பு கம்பம் நடப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் தினமும் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து பக்தர்கள் ஊற்றி வருகின்றனர்.

அதேபோல் ஒவ்வொரு நாளும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதேபோல் நேற்று இரவும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 11-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story