செம்பரபாக்கம் ஏரி தீவிரமாக கண்காணிப்பு..! எந்த அசம்பாவிதமும் நேராது- அமைச்சர் துரைமுருகன்


செம்பரபாக்கம் ஏரி தீவிரமாக கண்காணிப்பு..! எந்த அசம்பாவிதமும் நேராது- அமைச்சர் துரைமுருகன்
x

செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் அமைச்சர் துரைமுருகன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

சென்னை,

சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏரியில் இருந்து 1000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியில் தற்போது வினாடிக்கு 3,675 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. கடந்த 6 மணி நேரத்தில் 60 பில்லியன் கனஅடி நீர் உயர்ந்துள்ளது. ஏரி வேகமாக நிரம்பி வருவதால் கூடுதல் உபரி நீர் வெளியேற்ற வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் அமைச்சர் துரைமுருகன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ,பொதுப்பணி துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது ;

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தாலும், பிரச்சினை இல்லை.16ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் மழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

செம்பரம்பாக்கம் ஏரி தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் எந்த அசம்பாவிதமும் நேராது. முகலிவாக்கம் ,மாங்காடு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட செம்பரம்பாக்கம் காரணமல்ல. என்று தெரிவித்தார்.


Next Story