இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்


இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கூர் ஊராட்சி பண்டாரவாடையில் இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

ஆக்கூர் ஊராட்சி பண்டாரவாடையில் இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொகுப்பு வீடுகள்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் பண்டாரவாடை கீழத்தெருவில் 20-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளில் சுமார் 24 ஆண்டு காலமாக மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த வீீடுகள் மிகவும் சேதமடைந்து மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தும், கான்கிரீட் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீரமைத்து தர வேண்டும்

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-கடந்த 1996-97-ம் ஆண்டுகளில் இந்த வீடுகள் எங்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டது.இந்த வீடுகள் கட்டிமுடித்து சுமார் 24 ஆண்டுகள் ஆகிறது. வீட்டில் நாங்கள் இரவு தூங்கும் போது சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுகிறது. மழை பெய்தால் தண்ணீர் வீட்டுக்குள் ஒழுகுகிறது. கன மழை பெய்யும் போதும் இடி இடிக்கும் போதும் சிமெண்டு் காரைகள் பெயர்ந்து விழுகிறது. இதனால் இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்துடனே வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை வைத்துக்கொண்டு தூங்க வேண்டியுள்ளது. எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்து தரவேண்டும். இல்லையெனில் வேறு இடத்திற்கு குடியிருக்க மாற்றி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story