கருத்தரங்கம்


கருத்தரங்கம்
x

விருதுநகரில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகரில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் வங்கியாளர்கள் மற்றும் பிற துறை அலுவலர்களுக்கான இணை மானிய திட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தொழில்புரியஆர்வம் உள்ள தனிநபர் மற்றும் தொழில் குழு நபர்களை கண்டறிந்து விண்ணப்பம் பெறப்பட்டு வங்கிக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து விண்ணப்பிக்கும் நபர்களுக்கு உடனடியாக பரிசீலனை செய்து கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என திட்ட இயக்குனர் திலகவதி தெரிவித்தார். இதில் ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் தேவேந்திரன், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் சதீஷ்குமார், தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன், மகளிர் வாழ்வாதார சேவை மைய அலுவலர்கள், வட்டார அணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.



Next Story