கருத்தரங்கம்
பயிர் ரகங்கள் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உலக உணவு தினத்தை முன்னிட்டு பாரம்பரிய மிக்க உயர்தர உள்ளூர் பயிர் ரகங்கள் மேம்பாட்டு கருத்தரங்கம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் உயர்தர உள்ளூர் சிறுதானிய பயிர்ரகங்கள் குறித்த விளக்க ஏட்டை வெளியிட்டு கலெக்டர் மேகநாத ரெட்டி பேசினார். முன்னதாக உலக உணவு தினத்தை முன்னிட்டு வேளாண் உழவர் நலத்துறை சார்பாக அமைக்கப்பட்ட கருத்துக்காட்சியினை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் திட்ட இயக்குனர் திலகவதி, வேளாண் இணை இயக்குனர் உத்தண்ட ராமன், பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் டாக்டர் சீனிவாசன், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் டாக்டர் ராஜபாபு, அரசு அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story