கருத்தரங்கம்
அரசு கலைக்கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் வட்ட சட்ட பணிகள் குழு, வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து மாணவ-மாணவிகளுக்கான சட்டத்தின் ஆட்சி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சார்பு நீதிபதி ராமலிங்கம் தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கலைநிலா, திருச்சுழி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி அபர்ணா முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ரமேஷ் வரவேற்றார். கருத்தரங்கில் சட்டம் என்றால் என்ன? அடிப்படை உரிமைகள், சாலை விதிகளை மதித்தல், சட்டம் நிறைவேற்றுதல், புதிய சட்டம் இயற்றுதல், சாலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டத்தின் ஆட்சி குறித்த பல்வேறு தகவல்கள் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. இதில் வழக்கறிஞர் சங்க தலைவர் குருசாமி, மூத்த வழக்கறிஞர்கள் தங்க வடிவேல், விஜயரங்கன் கருத்துக்களை எடுத்துரைத்தனர். கருத்தரங்கில் வக்கீல்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.