பா.ஜ.க. சார்பில் சமூக நீதி கருத்தரங்கு


பா.ஜ.க. சார்பில் சமூக நீதி கருத்தரங்கு
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. சார்பில் சமூக நீதி கருத்தரங்கு நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, பா.ஜ.க.வும் பட்டியல் இனமக்களும், அம்பேத்கர் வழியில் மோடி என்ற தலைப்பில் சமூகநீதி கருத்தரங்கு ராமநாதபுரத்தில் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பார்வையாளர் முரளிதரன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் மணிமாறன் வரவேற்றார். கருத்தரங்கில் மத்திய பா.ஜ.க. அரசு பட்டியல் இன மக்களுக்கு வழங்கிவரும் சலுகைகள் நலத்திட்டங்கள் குறித்து எடுத்து கூறப்பட்டது. சமூக நீதியை காக்க பிரதமர் மோடி எடுத்துவரும் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பவர் நாகேந்திரன், ஆத்மா கார்த்திக், கணபதி, முன்னாள் நகர் தலைவர் வீரபாகு, ஊடக பிரிவு குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர் தலைவர் நாகராஜன் நன்றி கூறினார்.


Next Story