திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
சிதம்பரம்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் திடக்கழிவு மேலாண்மையில் நவீன தொழில்நுட்பமும் சிறந்த செயல்முறைகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கட்டிடவியல் துறை புலமுதல்வர் முருகப்பன் தலைமை தாங்கினார். கட்டிடவியல் துறை தலைவர் பூங்கோதை முன்னிலை வகித்தார். இதில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து கருத்தரங்கு மலரை வெளியிட்டார். பூங்கோதை வரவேற்று பேசினார். புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பேராசிரியர் செந்தில்குமார் கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கருத்தரங்கில் இந்திய அளவில் 19 விஞ்ஞானிகள் பங்கேற்று கலந்துரையாடினர். விழாவில் பேராசிரியர்கள் அருட்செல்வன், நேருக்குமார், மணி குமாரி, பழனிவேல் ராஜா, பாலகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை செந்தில்குமார், சிவராஜன், நாகராஜன், கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் சிவராஜன் நன்றி கூறினார்.