செம்மண் அள்ளிய லாரி-பொக்லைன் எந்திரம் பறிமுதல்


செம்மண் அள்ளிய லாரி-பொக்லைன் எந்திரம் பறிமுதல்
x

செம்மண் அள்ளிய லாரி-பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

துவரங்குறிச்சி:

துவரங்குறிச்சியில் திருச்சி சாலையில் உள்ள ஒரு உணவகம் அருகில் அனுமதியின்றி செம்மண் அள்ளுவதாக துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் செம்மண் அள்ளியது தெரியவந்தது. மண் அள்ளியவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர்கள் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் போடிக்கம்பட்டியை சேர்ந்த முருகேசன்(வயது 25), லாரி உரிமையாளர் சிவகங்கை மாவட்டம் கொண்டபாளையத்தை சேர்ந்த தியாகு(45), பொக்லைன் எந்திர உரிமையாளர் மணப்பாறை காட்டுப்பட்டியை சேர்ந்த முத்துச்செல்வன்(52) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story