செம்மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்


செம்மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே செம்மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே செம்மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மருதூர்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் சம்பவத்தன்று மாலை தக்கலை அருகில் உள்ள கூட்டமாவு, ஆள்காட்டிகுளம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் கூட்டமாவு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து அருகில் உள்ள ஜெகன் என்பவரின் இடத்திற்கு அனுமதியின்றி டெம்போ மூலம் செம்மண் கடத்தப்பட்டது. இதுபற்றி கண்ணன் தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசாரை கண்டதும் செம்மண் கடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து செம்மண் கடத்த பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், 2 டெம்போக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுசம்பந்தமாக காட்டத்துறை பகுதியை சோ்ந்த டெம்போ உரிமையாளர் அஜின் ராஜ் (40), கூட்டமாவு பகுதியை சோ்ந்த டிரைவர் ரெதீஷ்குமார் (30), அழகிய மண்டபத்தை சோ்ந்த டிரைவர் சஞ்சை (24), கூட்டமாவு பகுதியை சேர்ந்த ராஜ்குமார், ஜெகன் மற்றும் பொக்லைன் டிரைவர் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story