செஞ்சிக்கோட்டை கமலக்கண்ணி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


செஞ்சிக்கோட்டை கமலக்கண்ணி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சிக்கோட்டை கமலக்கண்ணி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி கோட்டையில் கமலக்கண்ணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 10 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை முன்னிட்டு பீரங்கி மேட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் கொடியேற்று விழா நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் கொடி மரத்திற்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, விழா கொடியேற்றப்பட்டது. விழாவில் தினசாி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 2-ந்தேதி காலை சாகைவார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில் தேரோட்டமும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் அரங்க. ஏழுமலை மற்றும் உபயதாரர்கள்,பொதுமக்கள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.


Next Story