குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்


குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்
x

பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என கரிகிரியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கேட்டுக்கொண்டார்.

வேலூர்

கிராமசபை கூட்டம்

காட்பாடி தாலுகா திருவலம் அருகேயுள்ள கரிகிரி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், ஊராட்சி தலைவர் தேவராஜ், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன், துணை தலைவர் சரவணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

இந்த கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த கிராமத்தில் ரூ.4 கோடியே 35 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கிராமங்களுக்கு செய்து வருகிறோம்.

பள்ளிக்கு அனுப்புங்கள்

தமிழக முதல்-அமைச்சர் நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வந்த மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும்போது கிராமப்புற மாணவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் ஏழை மாணவர்கள் பசியின்றி கல்வி பயில பெரும் உதவியாக இருக்கும். எனவே அனைவரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story